Dr. Rose Muralikrishnan
Connect
  • Home
  • Profile
  • About
  • Music
  • Listeners Choice
  • Concerts & Tours
  • Photos
  • Contact
  • S N A
    • Blog

கர்நாடக சங்கீதத்தின் முன்னோடியான தமிழிசையின் மேன்மைகளும், சிறப்புகளும்...

10/31/2016

0 Comments

 
Picture

சென்ற ஆண்டு 2015 செப்டம்பர்/அக்டோபர் மாதத்தில் தென் கலிபோர்னியாவின் பிரதான தமிழ்சங்கத்தினர் வெளியிட்ட தீபாவளி மலரில் நான் எழுதி வெளியிடப்பட்டிருந்த இந்த தமிழிசை பற்றினை கட்டுரையை மீண்டும் எனது இந்த வலைப்பதிவில் வெளிடிடுவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்!!! 
​


​'​கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றி மூத்த குடி தமிழ் குடி' என்னும் சொல்லுகேற்ப தமிழிசையின் மேன்மைகளும், சிறப்புகளும் அதே பழமையும் புகழும் வாய்ந்ததே. இசை எனப்படுவது பல வகைப்படலாம் அனால் தமிழிசை என்பது ஒரேயொரு வகை மட்டுமே. 

'இசையென்னும் எச்சம் பெறாவிடில், வசையென்ப வையத்தார்க்கெல்லாம்" மேலும் "வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழாதவர்" என்றெல்லாம் இசையை பற்றி விளம்புகிறது வள்ளுவம்.

​இறைவனை இசைமயமாக அறிந்ததே நமது தமிழ் கலாசாரம்.  'ஏழிசையாய்  இசைப்பயனாய் இருப்பவனே இறைவன்' என பண்பாடி மகிழ்ந்தோரே தமிழர். தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திருப்பாவை, திவ்யப்ரபந்தம் என பக்தியை இசைவடிவாக வெளிப்படுத்தினான் தமிழன்.

அதுமட்டுமின்றி ஒரு மனிதன் பிறத்தல் முதல் மறித்தல் வரை ஒவ்வொரு நாளும், நொடியும் இசையாகவே வாழ்க்கையை வடிவமைத்து வாழ்ந்தான். தமது சிந்தனை, சொல், செயல், வாழ்வு அனைத்துமே ஓர் இசைகலவையாய் வடிவமைத்தான். ஓர் ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தில் இணையும்பொது  கல்யாணப்பாட்டு, அப்பெண் தாய்மை அடையும் பொது நலங்கு பாட்டு, ஒரு சிசு தாயின் கருவறையில் நீந்தும் பொது வளைகாப்பு பாட்டு, குழந்தை பிறந்தக்கும் போது பெயர்சூட்டு  பாட்டு, பிறந்த சில நாட்களில்  தொட்டில் பாட்டு, பாலூட்ட பாட்டு, தாலாட்ட பாட்டு, சீராட்ட பாட்டு, சோறூட்ட பாட்டு, தூங்குவிக்க பாட்டு,  பிறந்த ஓராண்டு நிறைவுக்கு பிறந்த நாள் பாட்டு, பள்ளிக்கு சென்றால் பாடங்களில் பாட்டு, வீடு திரும்பிய பின் விளையாட்டு பாட்டு, பெரியவர் ஆகி தொழில் செய்ய சென்றால் அங்கும் தொழில் ரீதி பாட்டு, திருமணம் முடிக்க பாட்டு, சிறப்பு வாழ்க்கை வாழும் பொது வாழ்த்துப்பாட்டு, வாழ்ந்து முடிந்து இறக்கும் பொது ஒப்பாரிப்பாட்டு என இசையோடு இசைந்து தான் நமது தமிழ் கலாசாரம் வளர்ந்தது, வாழ்ந்தது, இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது, இனியும் வாழும்...

அதோடு நின்றுவிடவில்லை நம் தமிழிசையின் சகாப்தம். நாற்று நட ஓர் பாட்டு, களைப்பிடுங்க வேறொரு பாட்டு, கதிரறுக்க பாட்டு, தாளடிக்கவும், போரடிக்கவும், வண்டியோட்ட, நெல்குத்த, ஏற்றம் இறைக்க என பலவகை உழவுப்பாட்டு. படகோட்ட பாட்டு, பாம்பின் மகுடிக்கு பாட்டு, எல்லாம் வல்ல இறைவனை வலம்கொண்டு செல்ல பாட்டு , போர் களத்தில் போர்முழங்க பாட்டு என வாயால் பாடியும் நரம்பு கருவியல் நிமிட்டியும், தோல் கருவியால் தட்டியும், துளைக்கருவியால் ஊதியும், கனக்கருவியல் அதிர்வித்தும் வித விதமாய் இசைத்தான் அந்த இசையை. விழாக்கலங்களில் மட்டுமல்லாது மணப்பறை, பிணப்பறை, போர்ப்பறை, விழாப்பறை என ஒவ்வொரு முக்கிய தருணங்களிலும் இசையை மையமாகக்கொண்டே தமிழன் வாழ்ந்தான்.

மேலும் தமிழினம் அறியாத முக்கிய அம்சம் ஒன்றை மறக்கவியலா. கர்நாடக சங்கீதத்தை மட்டுமே தென்னிந்திய இசை என நம்முள் பலர் பெருமிதபட்டுகொண்டுள்ளோம். அது முக்கலமுழுக்க தவறான கருத்து. இன்றைய கர்நாடக சங்கீதத்தின் முண்டோடியே தமிழிசை தான் என்று எவருமே நம்பற்கறிய உண்மையை நிஜமென்று கூறினால் அது மிகையாகது. தமிழிசையில் 'பண்' எனப்பட்ட வார்த்தையே பிறகு சமஸ்கிருதத்தில் ராகம் எனப்பட்டது. தொல்காபியத்தில் கூறப்பட்ட 'யாழ்' தான் இன்றைய வீணை. ஏழு ஸ்வரங்களான ஸ ரி க ம ப த நி  கூட குரல், துத்தம், கைக்கிளை, உழி, இளி, விளரி, தாரம் எனும் 7 தமிழிசை வடிவமே. அதுமட்டுமின்றி ஸ்தாயி (Octave) 'மண்டிலம்' எனவும் க்ரம (grama) 'பாலை' எனவும், க்ரஹ பேதம் (model shift) 'பண்ணு ஏற்றல்' எனவும், cycle of fifth என்பது 'ஆயப்பாலை' எனவும் 200 BC -200 AD நூற்றாண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டுள்ளது. அன்றைய செம்பாலை இன்றைய ஹரிகாம்போதி ராகம், அதேபோல் பதுமை பாலை - நடபைரவி, விளரிப்பலை - ஹனுமதோடி, அரும்பாலை - தீரசங்கராபரணம், கோடிப்பாலை - கரஹரப்ரிய, மேற்செம்பாலை - மேசகல்யாணி என்பது எத்தனை பேருக்கு தெரியும். இதே போன்று 103 பண்கள் நடைமுறையில் இருந்துள்ளது, ஆனால் இன்று கர்நாடக இசையில் நாம் காணும் சம்பூர்ண ராகங்கள் 72 மட்டுமே. இப்பேர்ப்பட்ட நம்பற்கறிய தமிழிசையின் சிறப்புகளை பஞ்ச மரபு, வட்டப்பாலை, தொல்காப்பியம் என்னும் காப்பியங்கள், நூல்கள் விரிவாக்கத்துடனும் ஆதரங்களுடனும் இயம்புகின்றன .

தமிழசையின் மாண்புகளையும், தொன்மையையும் இப்படி காலத்தால் அழிக்கவியலா பற்பல நூல்களிலிருந்து நம்மால் அறிந்துக்கொள்ள முடிகிறது.  அதுமட்டுமின்றி 1. ஆடல், 2, பாடல், 3. கொட்டு, 4. ஓசையின் அளவை, 5. தாள வகை, 6. தூக்கு, 7. பிண்டி/ பிணையல், 8. குரவை, 9. வரிக்கூத்து, 10. யாழ், 11. குழல், 12. முழவு, 13. பெயர், 14. அலகுகள், 15 இசையின் எண் என பலவகையாய் பிறப்பிக்கப்படும் இசையின் எண்ணிக்கை 11991 என நூற்பா இயம்புகிறது. இதில் கடைசியாய்  16. அழிந்து போன இசை நூல்களான சிற்றிசை, பேரிசை, இசைநூல், இசைநுணுக்கம், இசைவிளக்கம், பஞ்சமாபாரதீயம், இசைகூறு, பாடரற்பண்பு, தாளவகையோத்து, தாளசமுத்திரம், கருவி இலக்கணம், ஆளத்தி அமைப்பு காலத்தால் அழிக்கப்பட்டு போயின. இறந்து போன இவ்விசை நூல்களும் நம்மிடையே நடமாடி இருந்தால் இன்றைய தமிழ் சமுதாயம் கண்டிப்பாக மற்றோர் நிலையில் தான் இருந்திருக்கும்.

இந்நாள் வரை இசையை இன்றைய இளைய சமுதாயத்திற்கு பயிற்றுவிக்கும் இசை ஆசிரியையாகவும், அதே இசையை மேடைகளில் பாடி வரும் வித்வாம்சினியாகவும், இசையையே வழிப்பட்டு வாழுமோர் இசைபக்தையாகவும், வாழ்ந்துவரும் எனக்கு இசையைப்பற்றி எழுதத் தோன்றினதால் இக்கட்டுரையை என்உடன் பிறவா இசைவிரும்பும் தமிழினத்திற்கு சமர்ப்பிக்கிறேன். நூறுகோடி பிறவி  எடுதாலும் கற்றறிய இன்னுமோர் பிறவி வேண்டும் என மன்றாடும் தமிழிசையினை ஒரு கட்டுரையினால் விளக்க இயலாது என்பதால் எழுதுதல் இனியும் தொடரும்...  
என்றும் அன்புடன்
​RM

0 Comments

    Author

    Rose Muralikrishnan

    Archives

    October 2016
    July 2015
    April 2015
    April 2014
    July 2013
    May 2013
    April 2013

    Categories

    All
    Carnatic Education
    Carnatic Music Learning
    Happy Family
    Indian Music
    Joy Of Music
    Music Education
    Music Learning

    RSS Feed

All Rights Reserved By The Sole Site Owner  www.rosemuralikrishnan.com  2026

Concept & Web Design:  RM